/* */

நாமக்கல் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம்
X

பரமத்திவேலூரில் நடைபெற்ற, லோக்சபா ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் உமா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான, முதற் கட்ட பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.. ஓட்டுச் சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச் சாவடி மையங்களில் வாக்குபதிவு நாளான ஏப். 19 அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒருமுதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 7,816 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு இன்று 6 இடங்களில் சட்டசபை தொகுதி வாரியாக நடைபெற்றது. ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு ராசிபுரம் எஸ்.ஆர்.வி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு அக்கியம்பட்டி, வேதலோகா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிக்கு பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்கு தோக்கவாடி கே.எஸ்.ஆர் கல்லூரி, குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சிவகுப்பு நடைபெற்றது, மாவட்ட கலெக்டர் உமா இந்த பயிற்சி வகுப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், லோக்சபா தேர்தலை அமைதியாகவும், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக ஓட்டுச்சாவடி மையங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின் போது உதவி தேர்தல் நடத்தும்அலுவலர்கள் நாமக்கல் பார்த்தீபன், திருச்செங்கோடு சுகந்தி, சேந்தமங்கலம் பிரபாகரன், ராசிபுரம் முத்துராமலிங்கம், பரமத்திவேலூர் பாலகிருஷ்ணன், குமாரபாளையம் முருகன், சிஇஓ மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 24 March 2024 12:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்