/* */

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, இன்று விவசாயிகள் முகமூடி அணிந்து நூத முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
X

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடக்கோரி, வலையப்பட்டியில் விவசாயிகள் முகமூடியணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, இன்று விவசாயிகள் முகமூடி அணிந்து நூத முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை துவக்கி, இதுவரை 53 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தநிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், 54வது கட்ட போராட்டம், இன்று வலையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், சரவணன், தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான விவசாயிகள் ஆண்களும் பெண்களும் வித்தியாசமான முகமூடிகளை அணிந்து, போராட்டத்தில் கலந்து கொண்டு சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 3 March 2024 6:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  3. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  4. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  5. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  6. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  8. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!