/* */

மேட்டூர் அணையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்துக்காக 1,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
X

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உமா, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்துக்காக 1,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ., கடந்த 25ம் தேதி வரை 731.87 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 15.33 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை நெல் 4164 எக்டர், சிறுதானியங்கள் 72,460 எக்டர், பயறு வகைகள் 7,930 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 29,650 எக்டர், பருத்தி 2,678 எக்டர் மற்றும் கரும்பு 8,989 எக்டர் என மொத்தம் 1,23,193 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 548 எக்டர், கத்திரி 401 எக்டர், வெண்டை 298 எக்டர், மிளகாய் 266 எக்டர், மரவள்ளி 3,571 எக்டர், வெங்காயம் 3382 எக்டர், மஞ்சள் 1789 எக்டர் மற்றும் வாழை 2436 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

பின்னர் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விபரம்:

குப்புதுரை (விவசாயி): ராஜவாய்க்காலில், கடைமடை வரை தண்ணீர் வருவதில்லை. மேட்டூர் அணையில் இருந்து, 250 கனஅடி தண்ணீர் திறக்கின்றனர். அதனால், பாசனத்திற்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உமா (கலெக்டர்): அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்புதுரை: ராஜா, குமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் பாசன வாய்க்காலில், டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் கலக்கிறது. அதனால், நீர் மாசுபட்டு, பயிர் செய்ய முடியாமலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். 500 ஆண்டுக்கு முன் விவசாய பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட ராஜா வாய்க்காலில், கழிவுநீர்விட்டு, அரசு அதிகாரிகளே சட்ட விரோதமாக நடந்து கொள்கின்றனர். இப்பிரச்னைக்கு, இடைக்கால நிவாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: மோகனூர், ப.வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை போன்ற டவுன் பஞ்சாயத்து கழிவுநீர், ஆற்றில் கலப்பதை நிரந்தரமாக தடுப்பதற்கு, ஒன்றறை ஆண்டுகளாகும். தற்காலிகமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்ரமணியன், (பொதுச்செயலாளர் விவசாய முன்னேற்ற கழகம்): நாமக்கல் உழவர் சந்தையின் வெளியே, சாலையோரம் ஆக்கிரமித்து, காய்கறி விற்பனை செய்கின்றனர். அதனால், உழவர் சந்தைக்கு காய்கறி விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.

கலெக்டர்: விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள், குறைந்த விலைக்கு மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான், உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. ராசிபுரம் உழவர்சந்தை வெளியே காய்கறி விற்பனை செய்தவர்களை, போலீசார் உதவியுடன் அகற்றிப்பட்டது. அதேபோல், நாமக்கல் உழவர் சந்தை வெளியே, வியாபாரம் செய்து வருபர்களை, போலீசார் முன்னிலையில், அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில், விவசாயிகள் சரவணன், நடேசன், பூபாலன், சுந்தரம், ராஜேந்திரன் உள்ளிட்டோர், பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். திரளான அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Dec 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?