/* */

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ. 4.15 ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து சரிவடைந்து வந்த முட்டை விலை, இன்று 5 பைசா உயர்ந்து ரூ. 4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ. 4.15 ஆக நிர்ணயம்
X

பைல் படம்

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து சரிவடைந்து வந்த முட்டை விலை, இன்று 5 பைசா உயர்ந்து ஒரு முட்டை விலை ரூ. 4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த பிப். 22ம் தேதி ரூ. 5 ஆக இருந்த முட்டை விலை படிப்படியாக சரிவடைந்து, கடந்த 24ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆனது. முட்டை விலை தொடர் சரிவால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை, மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பண்ணையாளர்கள் என்இசிசி நிர்ணயிக்கும் விலையைவிட, விலை குறைத்து முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என என்இசிசி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 465, பர்வாலா 390, பெங்களூர் 440, டெல்லி 412, ஹைதராபாத் 375, மும்பை 455, மைசூர் 440, விஜயவாடா 400, ஹொஸ்பேட் 400, கொல்கத்தா 445.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 132 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 65 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Updated On: 30 March 2024 1:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்