/* */

நாமக்கல் மாவட்ட வாக்காளர்கள் 14.30 லட்சம்..! 6,591 பேர் சேர்ப்பு: 27,868 பேர் நீக்கம்..!

Voter ID News -நாமக்கல் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட வாக்காளர்கள் 14.30 லட்சம்..!   6,591 பேர் சேர்ப்பு: 27,868 பேர் நீக்கம்..!
X

நாமக்கல் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டு, அரசியல் கட்சியினருக்கு வழங்கினார்.


Voter ID News-நாமக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டயலின்படி மொத்தம் 14 லட்சத்து, 30 ஆயிரத்து, 953 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் ஸ்ரேயா சிங், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், கடந்த ஜன. 5 முதல், அக். 31 வரை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை விசாரணை செய்து, வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றை, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ஆர்.டி.ஓ., தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் பொது மக்கள் பார்வையிடலாம்.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,) சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,627 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

கடந்த, ஜன. 5ல், 6 தெகுதிகளிலும் சேர்த்து, மொத்த வாக்காளர்கள், 14 லட்சத்து 52 ஆயிரத்து 230 பேர். புதியதாக சேர்க்கப்பட்டவர்கள் 6,591. நீக்கம் செய்யப்பட்டவர்கள் 27, 868 பேர். தற்போதைய மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 பேர். வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு, புகைப்பட அடையாள அட்டைகள், தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, வரும் டிசம்பர் 8ம் தேதி வரை, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். இப்பணியின்போது, வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (2004, டிச. 31 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்), தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள்,திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து ஓட்டுச் சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.

மேலும், வரும், 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில், மாவட்டத்தில் உள்ள, 686 ஒட்டுச் சாவடி மையங்களிலும், சிறப்பு முகாம்கள் நடக்கிறது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.

* சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்:

ராசிபுரம் (எஸ்சி): மொத்த வாக்குச்சாவடிகள் 260, ஆண் வாக்காளர்கள் 1,13,843, பெண் வாக்காளர்கள் 1,20,013, இதர வாக்காளர்கள் 6, மொத்தம் 2,33,862.

சேந்தமங்கலம் (எஸ்டி): மொத்த வாக்குச்சாவடிகள் 284, ஆண் வாக்காளர்கள் 1,18,197, பெண் வாக்காளர்கள் 1,23,831, இதர வாக்காளர்கள் 26, மொத்தம் 2,42,054.

நாமக்கல் : மொத்த வாக்குச்சாவடிகள் 289, ஆண் வாக்காளர்கள் 1,22,935, பெண் வாக்காளர்கள் 1,31,724, இதர வாக்காளர்கள் 46, மொத்தம் 2,54,705.

பரமத்திவேலூர் : மொத்த வாக்குச்சாவடிகள் 254, ஆண் வாக்காளர்கள் 1,06,567, பெண் வாக்காளர்கள் 1,15,154, இதர வாக்காளர்கள் 8, மொத்தம் 2,21,729.

திருச்செங்கோடு : மொத்த வாக்குச்சாவடிகள் 261, ஆண் வாக்காளர்கள் 1,11,051, பெண் வாக்காளர்கள் 1,17,389, இதர வாக்காளர்கள் 47, மொத்தம் 2,28,487.

குமாரபாளையம் : மொத்த வாக்குச்சாவடிகள் 279, ஆண் வாக்காளர்கள் 1,22,038, பெண் வாக்காளர்கள் 1,28,026, இதர வாக்காளர்கள் 52, மொத்தம் 2,50,116.

மாவட்டம் முழுவதும் உள்ள 6 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் வாக்குச்சாவடிகள் 1,627, ஆண் வாக்காளர்கள் 6,94,631, பெண் வாக்காளர்கள் 7,36,137, இதர வாக்காளர்கள் 185, மொத்த வாக்காளர்கள் 14,30,953.

டி.ஆர்.ஓ. (பொ) கவிதா, ஆர்.டி.ஓ. மஞ்சுளா, தாசில்தார் சக்திவேல், தேர்தல் பிரிவு தாசில்தார் பிரகாஷ், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...