/* */

நாமக்கல்லில் 21ம் தேதி திமுக இளைஞரணிக் கூட்டம் : அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

நாமக்கல் நகரில் 21ம் தேதி நடைபெறும், மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 21ம் தேதி  திமுக இளைஞரணிக் கூட்டம் : அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
X

நாமக்கல் அருகே, மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான, பந்தல் அமைக்கும் பணிகளை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் பார்வையிட்டார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் நகரில் 21ம் தேதி நடைபெறும், மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். விழா நடைபெறும் இடத்தை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 21ம் தேதி, ஈரோட்டில் இருந்து கார் மூலம் நாமக்கல் வருகிறார். நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெறும், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதைப் பார்வையிட்டு ஆய்வு செய்த, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியவாது:

21ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை 3 மணிக்கு, அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். பின்னர், நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டைமேடு அருகே, நடைபெறும் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொள்வார்கள். அவருக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போதமலைக்கு, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை ரோடு வசதி செய்யப்படவில்லை. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது ரூ. 140 கோடி மதிப்பில் ரோடு அமைக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில், வெண்ணந்தூர் அருகே மலைவாழ் மக்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து, நன்றி தெரிவிக்கப்படுகிறது என அவர் கூறினார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Nov 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து