/* */

நாமக்கல்லில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

நாமக்கல் டவுன் பஸ் நிலையம் அருகில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி பேசினார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல்லில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் டவுன் பஸ் நிலையம் அருகில், திமுக அரசின், ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சித் துணைத்தலைவர் பூபதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்து, கடந்த ஒரு ஆண்டில் நாமக்கல் பகுதிக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

கட்சியின் பேச்சாளர்கள் மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைப்பித்தன், செந்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சித் தலைவர் கலாநிதி, மாநில திமுக நிர்வாகிகள் மணிமாறன், ராணி, மாவட்ட அவைத்தலைவர் உடையவர் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலசுப்ரமணியம், நவலடி, திமுக பிரமுகர்கள் மாயவன், ராஜகோபால் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 21 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?