/* */

மகள் காதல் திருமணம்: பாேலீஸ் ஜீப் முன்பு படுத்த உருண்டு பெற்றாேர் பாசப்பாேராட்டம்

காதல் திருமணம் செய்த மகளை, தங்களிடம் ஒப்படைக்கக்கோரி போலீஸ் ஜீப் முன்பு பெற்றோர்கள் படுத்து புரண்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

மகள் காதல் திருமணம்: பாேலீஸ் ஜீப் முன்பு படுத்த உருண்டு பெற்றாேர் பாசப்பாேராட்டம்
X

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, நாமக்கல் கோர்ட் வளாகத்தில் போலீஸ் ஜீப் முன்பு பெற்றோர்கள் படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இராசிபுரம் தாலுக்கா தாண்டாகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகள் பவதாரணி (23). இவரும் அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 25) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பவதாரணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால், காதல் ஜோடி இருவரும் வீட்டை வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஆபீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும், நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜயன் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பவதாரணி, கணவர் மணியுடன் தான் செல்வேன் என உறுதியாக கூறினார். திருமண வயதை அடைந்து விட்டதால், அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி கூறினார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்களை தங்களது ஜீப்பில் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த பவதாரணியின் பெற்றோர் தங்களது மகளை போலீஸ் ஜீப்பில் இருந்து இறக்கி தங்களிடம் ஒப்படைக்குமாறு, ஜீப் முன்பு ரோட்டில் படுத்து அழுது புரண்டனர். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே காதல் ஜோடியை மற்றொரு வாகனத்தில் ஏற்றி, போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பவதாரணியின் பெற்றோரிடம் பேசி சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 27 Aug 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?