/* */

பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில், சம்பா நெல் மற்றும் வெங்காயம் பயிர் இன்சூரன்ஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்

இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 21 பிர்க்காக்களில், சம்பா நெல் பயிருக்கும், 6 பிர்க்காக்களில் வெங்காயம் பயிருக்கும் பயிர் இன்சூரன்ஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாய கடன் பெறும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்றவு சங்கங்களில், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில், சம்பா நெல் பயிருக்கு வருகிற டிசம்பர் 15ம் தேதிக்குள்ளும், வெங்காயம் பயிருக்கு இம்மாதம் 30ம் தேதிக்குள்ளும் இன்சூரன்ஸ் செய்துகொள்ள வேண்டும். ஒரு ஏக்கர் சம்பா நெல் பயிருக்கு ரூ.519ம், வெங்காயம் பயிருக்கு ரூ.1920ம் பிரிமியம் செலுத்து வேண்டும்.

இன்சூரன்ஸ் விண்ணப்பங்களை, சம்மந்தப்பட்ட விஏஓவிடம் அடங்கல், விதைப்பு சான்று, செயல்பாட்டில் உள்ள பேங்க் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து, கட்டணத்தை பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்தலாம். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா; மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Updated On: 10 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  10. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ