/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 103 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 103 மையங்களில் 21,250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 103 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 3ம் தேதி 103 மையங்களில் 21,250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாமக்கல் வட்டாரத்தில், எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர், நாமக்கல் நகராட்சி, முதலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நாமக்கல் பஸ் நிலையம், என்ஆர்இஜிஎஸ் மையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

திருச்செங்கோடு வட்டாரத்தில் 8 மையங்களிலும், பள்ளிபாளையம் வட்டாரத்தில் 11 மையங்களிலும், இராசிபுரம் வட்டாரத்தில் 8 மையங்களிலும், எருமப்பட்டி வட்டாரத்தில் 6 மையங்களிலும், மோகனூர் வட்டாரத்தில் 4 மையங்ளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

புதுச்சத்திரம் வட்டாரத்தில் 6 மையங்களிலும், கபிலர்மலை வட்டாரத்தில் 6 மையங்களிலும், பரமத்தி வட்டாரத்தில் 8 மையங்களிலும், எலச்சிபாளையம் வட்டாரத்தில் 6 மையங்களிலும், சேந்தமங்கலம் வட்டாரத்தில் 8 மையங்களிலும், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் 6 மையங்களிலும், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 6 மையங்களிலும், வெண்ணந்தூர் வட்டாரத்தில் 6 மையங்களிலும், கொல்லிமலை வட்டாரத்தில் 6 மையங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். மொத்தம் உள்ள 103 மையங்களில் 22,150 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Updated On: 3 Sep 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  10. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது