/* */

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் மின் ஊழியர்கள்தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்
X

நாமக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு 2022ம் ஆண்டின் மின்சார சட்ட திருத்த மசோதாவை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதைக் கண்டித்து இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலர்களும், அலுவலகங்களில் கையொப்பமிட்டு, பணிகளைப் புறக்கணித்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Updated On: 8 Aug 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  4. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  5. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  7. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  8. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  9. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்