/* */

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: டிச.14ம் தேதி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 3.31 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: வரும் 14ம் தேதி துவக்கம்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: டிச.14ம் தேதி துவக்கம்
X

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு, இரண்டாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி, வரும் 14 முதல், 21 வரை, நடடைபெறுகிறது. மாவட்டத்தில் 3,31,124 கால்நடைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி, கால்நடைகளை, அவர்களால் குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று, கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம், முன்கூட்டியே, தடுப்பூசி போடப்படும் விபரம் தெரியப்படுத்தப்படும். இந்த தடுப்பூசிப் பணிக்காக, மாவட்டம் முழுவதும், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களைக் கொண்ட தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், மூன்று மாதத்துக்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று, வரும் 14 முதல், ஒவ்வொரு கிராமத்திலும், குறிப்பிடப்பட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து