/* */

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில், கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நாமக்கல் கலெக்டர் திடீர்  ஆய்வு
X

நாமக்கல் ச.பே.புதூரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று அதிகமுள்ள 10க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு தகரம் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே செல்லவும், வெளியில் இருந்து வருபவர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை, நாமக்கல் கலெக்டர் மெகராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்களிடம் அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கிறதா, தன்னார்வலர்கள் சரியாக செயல்படுகிறார்களாஎன்பதை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதேபோல் திருச்செங்கோடு நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 4 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  3. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  5. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  6. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  7. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  8. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  9. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  10. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...