/* */

நாமக்கல் தேவாலய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்

நாமக்கல் தேவாலய குருத்தோலை ஞாயிறு பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் தேவாலய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்
X

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு விழாவில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் வழிபாடு நடத்தினர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு, தனது கோட்பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது.

குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். இதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறு என்று, குருத்தோலையை ஏந்தி ஊர்வலமாக சென்று சிறப்பு திருப்பலியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. தமிழகத்திலும், நேற்று அதிகாலை முதலே பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபம் இன்று நடந்தது. பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில் நடந்த வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மோகனூர் அடுத்த ஆர்.சி.பேட்டப்பாளையம் புனித செசீலி ஆலயத்தில் பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலைமையில், குருத்தோலை ஏந்தி, ஓசன்னா பாடலை பாடி, கிறிஸ்துவர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். கடந்த, பிப்ரவரி 14ம் தேதி, சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் துவங்கினர். ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த தவக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு பவனியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

Updated On: 24 March 2024 11:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா