/* */

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 2ம் தேதி நாமக்கல்லில் துவங்குகிறது.

HIGHLIGHTS

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு  நாமக்கல்லில் இலவச பயிற்சி
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது முடிவுகள் வெளியாகியுள்ள போலீசார் மற்றும் சீருடைப்பணியாளர் தேர்வில் இங்கு பயிற்சி பெற்ற 17 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவப் பரிசோதனைக்கு தேர்வாகியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் 3 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) 7,500 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனில், வரும் மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர்கள் மூலம் ஆன்லைன் முறையில் நடைபெறும் தேர்வுகள் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் மே 2ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமாகவோ, அல்லது onlineclassnkl@gmail.com என்ற இமெயின் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற வெப்சைட்டில் அனைத்து போட்டித் தேர்வுக்கான வீடியோ காட்சி, மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் அவற்றை டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...