/* */

அனுமதியின்றி ஊர்வலம்: 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்கு

நாமக்கல்லில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற விடுதலைக் களம் அமைப்பைச் சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அனுமதியின்றி ஊர்வலம்: 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்கு
X

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அவரது உருவப்படத்திற்கு விடுதலைக்களம் அமைப்பினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்.16ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த விடுதலைக் களம் அமைப்பினர் புதுச்சத்திரம், பொம்மைக்குட்டைமேடு ஆகிய இடங்களில் ஊர்வலமாக சென்று கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்த விடுதலைக்களம் அமைப்பின் தலைவர் நாகராஜ் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கட்டபொம்மன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் காந்தியவாதி ரமேஷ், பாஜக பிரமுகர் பிரணவ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாக விடுதலைக் களம் தலைவர் நாகராஜ் உட்பட 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 17 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...