/* */

நாமக்கல்லில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றும்: நகர தலைவர் சரவணன்

நாமக்கல் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றும் என நகர தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றும்: நகர தலைவர் சரவணன்
X

நாமக்கல் நகராட்சி 18வது வார்டில் பாஜக தேர்தல் அலுவலகத்தை நகர தலைவர் சரவணன் திறந்து வைத்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். அருகில் வேட்பாளர் சுதா.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை, குழந்தான் தெரு, முல்லை நகர் பகுதியில் உள்ள நகராட்சி 18வது வார்டு பகுதியில் பாஜக சார்பில் சுதா போட்டியிடுகிறார்.

இதையொட்டி ஏ.எஸ்.பேட்டை முல்லை நகர் பகுதியில் பாஜ தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நகர செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் சவரணன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் பிரச்சாரத்தை துவக்கி வைத்து அவர் பேசுகையில், நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 2 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 37வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பாஜ வேட்பாளர்கள் 23 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். பாரதப்பிரதமர் மோடியின் திட்டங்களால் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் பொதுமக்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் பாஜாகவின் செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. நடைபெற உள்ள நாமக்கல் நகராட்சித் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட பாஜக கவுன்சிலர்கள் வெற்றிபெறுவது உறுதி என்று சரவணன் பேசினார்.

பாஜக பொது செயலாளர் தினேஷ், சிலம்பரசன், கணேசன், வார்டு பொறுப்பாளர் வடிவேல், இளமுருகன், கீர்த்தி, பாரிவள்ளல், மாலதி, ராமசாமி, பூபதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...