/* */

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, நாமக்கல் அழகு நகர் பொதுமக்கள் கோரிக்கை

namakkal news, namakkal news today- நாமக்கல் அழகு நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று, பொதுக்குழு கூட்டத்தில் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற,  நாமக்கல் அழகு நகர் பொதுமக்கள் கோரிக்கை
X

namakkal news, namakkal news today- நாமக்கல் அழகு நகர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில், அதன் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

namakkal news, namakkal news today- நாமக்கல், திருச்சி ரோட்டில், நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அழகு நகர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராமசாமி, பொருளாளர் வீராசாமி. துணைத்தலைவர் மணிராஜா, துணை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;

நாமக்கல் அழக நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு துவக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்குள்ள ஒரு சில ரோடுகள் தவிர மற்ற ரோடுகள் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படவில்லை. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் பள்ளிக்கு செல்லும் மெயின் ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சைக்கிள்களில் செல்லும் பள்ளிக்குழந்தைகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து ரோடுகளையும் செப்பனிட்டு புதுப்பிக்க வேண்டும்.

மேலும், அனைத்து பகுதிகளிலும் கழிநீர் சாக்கடைகள் உடைந்துள்ளன, கழிவு நீர் செல்லும் சிறிய பாலங்கள் சேதமடைந்து ஆங்காங்கு கழிவுநீர் தேங்கி சுகதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும். அழகு நகர் முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திரளன பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Aug 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு