/* */

சுதந்திர தின தேன் விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

75வது சுதந்திர தின தேன் விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சுதந்திர தின தேன் விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி
X

சுதந்திர தின தேன்விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 75வது சுதந்திர தின தேன் விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் மக்கள் நீதி மன்றத் தலைவர் சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், வக்கீல்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு மகாத்மாகாந்தியின் தியாகங்கள், அவர் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகள், அவரின் அகிம்சை வழியில் கிடைத்த வெற்றிகள் குறித்து பேசினர். தொடர்ந்து, இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

அதையடுத்து நடந்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். பேரணியில், சுதந்திரத்தின் வலிமை, காந்தியடிகளின் நேர்மை குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். சுப்ரீம் கோடர்டில் நடந்த தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், 25வது ஆண்டு விழா குறித்து வீடியோகாட்சி காண்பிக்கப்பட்டது. திரளான நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  4. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  8. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  9. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு