/* */

பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு

PM Housing Scheme in Tamil -நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிரதமரின் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு
X

நாமக்கல் மாவட்டத்தில், பிரதமரின் வீடுகட்டும் திட்டப் பயனாளிகளுக்கு, விழிப்புணர்வு கையேடுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

PM Housing Scheme in Tamil - நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிரதமரின் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டி வரும் பயனாளிகளுக்கு, விழிப்புணர்வு வழங்கும், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.

நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் 2016 -2017ஆம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் 2021 - 2022ன் கீழ் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம், அவர்களின் வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் தொகை ரூ.2.27,290 குறித்தும், வீடுகள் அளவீடுகள் துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மூட்டைகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்தும் பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசிடமிருந்து 3,213 கையேடுகள் வரப்பெற்றுள்ளன. இந்த கையேடுகளை, முதலில் நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காதப்பள்ளி, எர்ணாபுரம், மாரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்களை சேர்ந்த பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி திட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Jun 2022 9:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?