/* */

நாமக்கல்லில் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

DMK News Tamil -நாமக்கல்லில் திமுக சார்பில் நடைபெற்ற இந்தி தினிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
X

நாமக்கல் டெலிபோன் எக்சேஞ்ச் எதிரில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், ராஜேஷ்குமார் எம்.பி தலைமையில், இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DMK News Tamil -தமிழகம் முழுவதும், இந்தி தினிப்பை எதிர்த்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், இந்தி தினிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நாமக்கல் டெலிபோன் எக்சேஞ்ச் எதிரில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்சயபா எம்.பியுமான ராஜேஷ்குமார், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது:

தமிழகத்தில் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்தி மொழிப்பாடம் விருப்பப் பாடமாக உள்ளது. விரும்புபவர்கள் அதை படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில், ஒரேநாடு, ஒரேமொழி, ஒரேமதம், ஒரேஉணர்வு, ஒரேபண் பாடு என்ற கருத்தை தினிகக மத்திய பா.ஜ. அரசு முயற்சிக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான பார்லி குழு அளித்துள்ள அறிக் கையில், மத்திய அரசுநடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமேபயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடு, இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வு களுக்கு எதிரானது. இதைத்தான் திமுக எதிர்க்கிறது. தேசியதேர்வுமுகமைமூலமா க ஒரேபொதுநுழைவுத்தேர்வு நடத் தப்படும் என்றதிட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத் திற்கு முரணானதும், மாநில உரி மகளை அடியோடுபறிக்க கூடியதாகவும், சமூகநீதிக்குமுற்றிலும் எதிரானதாகவும் உள்ளது. இது அனைவருக்குமான சமஉரிமை சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் தி.மு.க இந்த இந்திதிணிப்பைக் கடுமையாக எதிர்க்கிறது.

மேலும், மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியில் மட்டும் தேர்வுநடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியைப் படித் தால் மட்டுமேவேலை என்கிற நிலையை உருவாக்கும். இதைத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். தற்போது இந்தியாவில், இந்தி பேசும் 13 மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலத்தவர்கள் தமிழக முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, இந்தி தினிப்பை அவர்களும் எதிர்த்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக செய்யாத பல சாதனைகளை, கடந்த ஒரு ஆண்டில் திமுக அரசு செய்துள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் பாதை வசதி இல்லாத போதமலை கிராமத்திற்கு தார் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 9கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதிக்கான திட்டம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்காக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என்று கூறினார்.

நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ, மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாலசுப்ரமணியம், பழனிவேல், நவலடி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், சங்கர், பொதுக்குழு உறுப்பினர் மாயவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்ளிட்ட திரளான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்தி தினிப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Oct 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்