/* */

பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு..!

பரமத்தி மசூதியில், எம்எல்ஏ சேகர், அதிமுக வேட்பாளர் தமிழ்மணி ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

HIGHLIGHTS

பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு..!
X

பரமத்தி முஸ்லீம் மசூதியில், எம்எல்ஏ சேகர், அதிமுக வேட்பாளர் தமிழ்மணி ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பரமத்தி முஸ்லீம் மசூதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவாக எம்எல்ஏ சேகர் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் :

பரமத்தியில் எம்எல்ஏ சேகர், அதிமுக வேட்பாளர் தமிழ்மணியுடன் மசூதிக்கு சென்று ஆதரவு திரட்டினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக ராகா ஆயில் மில் தமிழ் மணி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர் திறந்த ஜீப்பில் கிராமம் கிராமாக சென்று தீவிர ஓட்டு சேகரித்தார். பரமத்தி முஸ்லீம் காலனியில் உள்ள மசூதிக்கு வேட்பாளர் தமிழ்மணியுடன் சென்ற எம்எல்ஏ சேகர் முஸ்லீம் பிரமுகர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதியில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று அவர்கள் தீவிரமாக ஓட்டு சேகரித்தனர். பல்வேறு இடங்களில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து, வேட்பாளர் தமிழ்மணிக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு எம்எல்ஏ சேகர் பேசினார். வாக்காளர்களிடம் வேட்பாளர் தமிழ்மணி கூறியதாவது::

பரமத்தி பகுதியில், விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயத்தில் எம்.எஸ்சி அக்ரி., முதுகலைப் பட்டம் பெற்று, தமிழக அரசின் வேளாண்மைத்துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்ற என்னத்தில், வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.

அதன்பின்னர் அதிமுகவில் இணைந்து அரசியல் பயனத்தை துவக்கினேன். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் பரமத்திவேலூர் பகுதி மக்களுக்கான ஏராளமான உதவிகளை செய்துள்ளேன். இதை பொதுமக்கள் நன்கு அறிவார்கள். முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடியார் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவுடன் முதல்முறையாக நாமக்கல் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.

எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் தொகுதி மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பேன். ஜாதி மத பாகுபாடு பார்க்கா£மல் பாடுபடுவேன் என அவர் கூறினார்.

பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வீரணம்பாளையம், சூரியம்பாளையம், மாணிக்கநத்தம், கரட்டுப்பாளையம், விஐபி காலனி, மறவாபாளையம், வெள்ளாளபாளையம் ஆசிரியர் காலனி, பிள்ளைகளத்தூர், வில்லிபாளையம், ஜங்கமநாயக்கன்பட்டி, குச்சிபாளையம், பில்லூர், கூடச்சேரி, சுங்கக்காரன்பட்டி, இருட்டணைப் புதூர், மேலப்பட்டி, நடந்தை, சூரம்பாயைம், குஞ்சாம்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், நல்லூர், செருக்கலை, புதுப்பாளையம், கோதூர், பிராந்தகம், மேட்டுக்கடை, செட்டியாம்பாளையம், கவுண்டிபாளையம், குண்ணமலை, இருப்புப்பாலம், சாத்தம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், எம்எல்ஏ சேகர், வேட்பாளர் தமிழ்மணி உள்ளிட்டோர் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்கள்.

Updated On: 28 March 2024 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!