/* */

மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர் உறுதி..!

சொந்தமாக ரிக் வண்டி வாங்கி போர்வெல் அமைத்துக் கொடுப்பேன் என்று நாமக்கல் அதிமுக வேட்பாளர் உறுதிமொழி வழங்கினார்.

HIGHLIGHTS

மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து  கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர் உறுதி..!
X

நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியில், அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டு பிரசாரம் செய்தார்.

நாமக்கல்:

லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, எம்.பியானால் சொந்த செலவில் ரிக் வண்டி வாங்கி, பொதுமக்களுக்காக இலவசமாக போர்வெல் அமைத்து, தண்ணீர் வசதி செய்துகொடுப்பேன் என நாமக்கல் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி உறுதிமொழி அளித்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின், வர்த்தக அணி செயலாளர் ராஹா தமிழ்மணி போட்டியிடுகிறார். அவர் நாமக்கல் பார்லி. தொகுதிக்கு உட்பட்ட, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி சட்டசபை தொகுதிகளில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொம்மம்பட்டி, பெரியமணலி, எலச்சிபாளையம், இலுப்பிலி, மாணிக்கம்பாளையம், உஞ்சனை உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களை சந்தித்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பெண்களுடன் ஆடிப்பாடி அவர் ஓட்டு கேட்டார்.

நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக முடக்கிவிட்டது. மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. இதனால் பொதுமக்கள் அனைவரும் ஆளுங்கட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. குடிக்க தண்ணீர் இல்லாமல் பெண்கள் குடத்துடன் அலைவதை பார்க்க முடிகிறது. நான் வெற்றிபெற்று எம்.பியானால் குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்;தி புதிய குடிநீர் திட்டத்தை கொண்டுவர பாடுபடுவேன்.

மேலும் எனது முத்தான முதல் திட்டமாக, உடனடியாக எனது செலவில், சொந்தமாக ரிக் வண்டி வாங்கி, குடிநீர் பிரச்சினை உள்ள கிராமங்களை தேர்வு செய்து போர்வெல் அமைத்து, தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். ஆகவே எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்ªச்ங்கோடு முன்னாள் எம்எல்ஏ பொன்சரஸ்வதி, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன், டவுன் பஞ்சாயத்து செயலாளர் சுந்தர்ராஜன், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அலமேலு விஜயன் உள்ளிட்ட பலர் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Updated On: 16 April 2024 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?