/* */

சான்றுபெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை

விவசாயிகள் சான்றுபெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சான்றுபெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை
X

பைல் படம்

விவசாயிகள் சான்றுபெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சித்திரைசெல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட, நிலக்கடலை மற்றும் உளுந்து ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை மூலமாக விதைச்சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணையில், விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு, வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.

வயல்தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு, அந்த வயல்மட்ட விதைகளை அரசு அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன. பகுப்பாய்வில் தரம் தேறிய விதைகள் சான்று செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிறச்சான்றட்டையும், சான்று விதைகளுக்கு நீல நிற அட்டையும் பொருத்தப்படுகிறது.

மேலும், சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சைநிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக் கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம். சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம் போன்ற குணநலன்களை கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயிரிட்டு அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Aug 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்