/* */

சித்திரைப்பட்டத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை

சித்திரைப் படத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

சித்திரைப்பட்டத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை
X

கோப்புப்படம் 

பொதுவாக பயறு வகைகள் ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் தைப்பட்டதில் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் சித்திரைப்பட்டத்தில் போதிய அளவு மழைப் பொழிவு இல்லாத காரணத்தாலும், சாதகமற்ற தட்பவெப்பநிலை காரணமாகவும் பயறுவகைகள் சாகுபடி செய்ய முடியவதில்லை. சித்திரைப் பட்டத்தில் உயர் விளைச்சலுக்கேற்ற பயறுகளை சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை, வேளாண் அலுவலர் சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விவசாயிகள், சித்திரைப் பட்டத்தில் பயறு வகைகளை சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் மகசூல் அறுவடை செய்து அதிக லாபம் பெறமுடியும். மேலும் காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலைநிறுத்தப்படுவதால் மண்வளம் மேம்படுத்தப்படும்.

எனவே விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள பயறு விதைகளான உளுந்து, தட்டைப்பயறு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை விதைப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம்.

நல்ல முளைப்புத்திறன் கொண்ட, நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதமுடைய மற்றும் பூச்சி நோய் தாக்குதல் இல்லாத விதைகளை விதைப்பதால் வயலில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பதுடன் அதிக மகசூல் பெறலாம்.

விதைத் தரத்தினை பொறுத்தவரை உளுந்து, தட்டைப்பயறு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விதை முளைப்புத்திறன் 75 சதவீதம், புறத்தூய்மை சதவீதம் மற்றும் ஈரப்பதம் 9 சதவீதமாக இருக்க வேண்டும்.

எனவே நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டிட வளாகத்தில் இயங்கி வரும், விதைப் பரிசோதனை நிலையத்தில் 100 கிராம் விதைக்கு ரூ.80 வீதம், ஒரு மாதிரிக்கான விதைப்பரிசோதனை கட்டணமாக செலுத்தி விதையின் தரத்தினை அறிந்து சாகுபடி செய்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர் நிலத்திலும் பாசிப்பயறு நன்கு விளையும். சித்திரைப்பட்டத்திலும் நல்ல விளைச்சலைத் தரும். நல்ல தரமான சான்று பெற்ற விதைகளை விதைக்க வேண்டும்..

ஏக்கருக்கு 8 கிலோ விதை வீதம், கிலோவுக்கு 4 கிராம் கார்பன்டாசிம் அல்லது திராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பூஞ்சாண விதை நேர்த்தி செய்த 24 மணி நேரம் கழித்து உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஆறிய அரிசிக் கஞ்சியில் 200 கிராம் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றுடன் கலந்து நேர்த்தி செய்து, 15 நிமிஷங்கள் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்திற்குள் 30க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தி கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். விதைக்கும் முன் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 10 கிலோ சாம்பல் சத்து, 4 கிலோ கந்தகச்சத்து மற்றும் 10 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை ஒரே சீராக அடி உரமாக இட வேண்டும்.

மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக இடுவதால் கந்தகச்சத்து தனியாக இட வேண்டிய அவசியமில்லை. ஆனால் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி) உரம் இடும் பொழுது பயிருக்குத் தேவையான கந்தகச்சத்தை ஜிப்ஸம் உரம் மூலம் அளிக்க வேண்டும். மண்புழு உரத்தினை ஏக்கருக்கு 340 கிலோ என்ற அளவில் இடுவதன் மூலம் பயிருக்குத் தேவையான தழைச்சத்தின் அளவை 50 சதவிகிதம் வரை குறைக்க இயலும்.

பயிருக்குத் தேவை யான நீரை விதைத்தவுடன் ஒரு உயிர் தண்ணீரும், மூன்றாம் நாள் மற்றொரு உயிர் தண்ணீரும் அவசியம் பாய்ச்ச வேண்டும். பின்னர் காலநிலை மற்றும் மண்வாகு ஏற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம் முதல் காய்கள் முற்றும் பருவம் வரை நிலத்தைக் காய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பயிரின் 50 சதவிகிதம் பூக்கும் பருவத்தில் (அதாவது 25 வது நாளில்) 2 சதவிகிதம் டி.ஏ.பி கரைசலை இலை வழி உரமாக மாலை வேளையில் கைத் தெளிப்பான் கொண்டு செடிகளின் மீது படுமாறு தெளிக்க வேண்டும். தெளித்தவுடன் உடனடியாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர் 15 நாள்கள் கழித்து (அதாவது காய் பிடிக்கும் பருவத்தில்) மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Updated On: 25 April 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?