/* */

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் அட்மிஷன்

நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டே எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் தகவல்

HIGHLIGHTS

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் அட்மிஷன்
X

நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியின் தோற்றம்.

நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் கலெக்டர் ஆபீஸ் பின்புறம் சுமார் 37 ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் ரூ.338 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இந்த ஆண்டு, இக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாண்டு வகுப்புகள் துவக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெளி மாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து இரவு பகலாக கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

13 மாத காலத்தில் கல்லூரியின் முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது கல்லூரி வகுப்பறைக் கட்டிடம், நிர்வாக அலுவலகம், லேபாரட்டரி, டீன் அலுவலர் அலுவலகம், டாக்டர்கள் மற்றும் பேராசிரியர் குடியிருப்புகள் போன்ற கட்டிடங்கள் நாமக்கலைச் சேர்ந்த் பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன்ஸ் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், இந்த மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாண்டுக்கு 150 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் குழுவினர் நாமக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், புதிய மருத்துவக்கல்லூரி வளாகத்தை பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், கடந்த 9ம் தேதி சென்னையில் பேட்டியளித்த தமிழக மக்கள் நழ்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 4 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், இந்த ஆண்டு தலா 150 மாணவர்கள் வீதம், மொத்தம் 6,00 மாணவ மாணவிகள் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டே செயல்பட துவங்கும் என்ற அமைச்சரின் அறிவிப்பால், நாமக்கல் மாவட்ட பொதுமக்களும், நீட் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 10 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை