மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மோகனூர் அருகே கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்

மோகனூர் அருகே கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

மோகனூர் பெரியார்நகர் காலனியை சேர்ந்தவர் ஜெகதீசன், இவரது மனைவி கல்யாணி. இவர்களது மகன் பூவரசன் (15). மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது, பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று தேர்வு இல்லாததால், வீட்டில் இருந்த பூவரசன் மதியம், 2.30 மணியளவில், அங்குள்ள நாகாயி அம்மன் கோயில் முன்புறம் உள்ள ஊர் பொதுக்கிணற்றில், தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது, கிணற்றில் தவறி விழுந் பூவரசன், நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பூவரசனை காணாமல் தேடிய அவரது பெற்றோர் கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்தனர். பின்னர் பூவரசன் சடலமாக மீட்கப்பட்டான்.

Updated On: 20 May 2022 12:45 PM GMT

Related News