/* */

நாமக்கல் மாவட்டத்தில் 5,413 பேர் தேர்வு நீட் எழுதுகின்றனர்: மாவட்ட நிர்வாகம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வில்,7 மையங்களில் மொத்தம் 5,413 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில்  5,413 பேர் தேர்வு நீட் எழுதுகின்றனர்: மாவட்ட நிர்வாகம்
X

பைல் படம்.

இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு சேர்க்க்காக நீட் நுழைவுத்தேர்வு தேசியத் தேர்வு முகமை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் மெத்தம் 3,500க்கும் அதிகமான மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் இந்தத்தேர்வு நடைபெறும். மதியம் 1.15 மணிக்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்ளின் தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும். 1.30 மணிக்கு பிறகு வருகை தருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து வரவேண்டும். முழுக்கை சட்டைகளை தவிர்க்க வேண்டும். சாதாரண செருப்புகளை அணியவேண்டும், ஷீக்கள் அணியக்கூடாது. தேர்வு மையத்திற்கு, தேர்வு நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்னாதாக வருகை தந்து கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள 7 நீட் தேர்வு மையங்களில், மொத்தம் 5,143 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களின் விபரம்: குமாரபாளையம் தாலுக்கா, பல்லக்காபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளி தேர்வு மையத்தில் மொத்தம் 1,224 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். நாமக்கல் டிரினிடி இண்டர்நேஷனல் பள்ளி மையத்தில் 576 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் அக்சரா அகடாமி பள்ளி மையத்தில் மொத்தம் 576 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 576 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். கீரம்பூர் தி நவாதயா அகாடமி பள்ளியில் 504 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சத்திரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரி தேர்வு மையத்தில் மொத்தம் 1,339 பேரும், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமிபள்ளியில் 648 பேரும் நீட் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 மையங்களில் 5,413 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

Updated On: 16 July 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்