/* */

நாமக்கல்லில் வரும் 29ம் தேதி தபால்துறை குறைதீர் கூட்டம்

நாமக்கல் கோட்ட தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 29ம் தேதி தபால்துறை குறைதீர் கூட்டம்
X

பைல் படம்.

நாமக்கல் கோட்ட தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் தபால்தறை கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்ட அளவிலான தபால்துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் நாள் வருகிற 29ம் தேதி மாலை 3 மணிக்கு, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தபால் துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருப்பின், தங்களது புகார்களை அஞ்சலக கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு, வரும் 28ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். புகார் அனுப்பும் தபால் உறையின் மீது அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்மந்தமாக என்று எழுதப்பட வேண்டும்.

குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். புகார் கடிதத்தில் முழுத் தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால் / ஸ்பீடு போஸ்ட் / மணியார்டர் எண், எந்த அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும். புகார்கள் சேமிப்பு கணக்கில் (அ) அஞ்சள் ஆயுள் இன்சூரன்ஸ் சம்மந்தமாக இருப்பின், அதன் அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?