/* */

நாமக்கல்லில் டிச.2ம் தேதி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பட்டினிப்போராட்டம்

108 ஆம்புலன்ஸ் சேவையை, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் டிச.2ம் தேதி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பட்டினிப்போராட்டம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மண்டல கூட்டத்தில், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் பேசினார்.

கோவை மண்டல அளவிலான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கோவை மண்டலக் குழு உறுப்பினர் முத்துப்பாண்டி உறுதிமொழியை வாசித்தார். மண்டலச் செயலாளர் சிவகுமார், உறுப்பினர் ஜெகதீசன், பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நாமக்கல், கரூர் மாவட்ட108 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பணி நீக்கத்தைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்கக் கோரியும், ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் தனியார் நிர்வாகத்திற்கு எதிராகவும், வரும் டிச.2ம் தேதி கோவை மண்டல அளவிலான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நாமக்கல்லில் பட்டினிப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும்,108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்