/* */

பொருளாதாரத்தை உயர்த்த பொங்கல் பரிசு - தங்கமணி

பொருளாதாரத்தை உயர்த்த பொங்கல் பரிசு - தங்கமணி
X

பொருளாதாரத்தை உயர்த்தவே பொங்கல் பரிசு திட்டமும் ரூ.2500 பணமும் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கொரோனா காலம் என்பதால் தற்போது வேலைவாய்ப்பு குறைவாக இருந்த காரணத்தால் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் நல்ல எண்ணத்தில் ரூ.2500 வழங்கியுள்ளார். இதனை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து முதலமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். அவரவர் கட்சியை வளர்ப்பதற்காக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர். கோவையில் திமுக நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு அந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 5 Jan 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்