Begin typing your search above and press return to search.
சங்கடஹர சதுர்த்தி: குமாரமங்கலம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
HIGHLIGHTS

சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்
சங்கடஹர சதுர்த்தி நாளையொட்டி குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் உள்ள கணபதிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இது போல் கலைமகள் வீதி கற்பக விநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.