/* */

அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள்..!

குமாரபாளையம் ஜி.எச்.க்கு 10 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள்..!
X

குமாரபாளையம் ஜி.எச்.க்கு 10 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகளை குமாரபாளையம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வழங்கினர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் போன்ற பொருட்களை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். உள் நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 2016, பிப். 27ல் குமாரபாளையம் தாலுகா அந்தஸ்து பெற்றது. ஆனால் இந்த மருத்துவமனை தாலுகா அந்தஸ்துக்கு ஏற்றபடி இல்லை.

போதிய கட்டிட வசதி, படுக்கை வசதி, சிகிச்சை வசதி, டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை கூடுதலாக்குதல் ஆகியன ஏற்படுத்தப்படாமல் உள்ளது. சாலை விபத்து, அவசர சிகிச்சை என்றால் ஈரோடு அல்லது சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பது வழக்கமாக உள்ளது.

இதனால் பல நோயாளிகள் உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது. தாலுகா அந்தஸ்துக்கு தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகள் உடனே எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயினும், அரசியல் கட்சியினர், லயன்ஸ், ரோட்டரி, பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு சேவா சங்கத்தினர், இந்த மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவி வருகிறார்கள்.

இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் போன்ற உதவிப்பொருட்களை வழங்கினர். தலைமை டாக்டர் பாரதியிடம், சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று இதனை நேரடியாக வழங்கினர்.

மருத்துவமனை சார்பில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Updated On: 18 April 2024 7:33 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  2. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  10. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...