/* */

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று குழு 2ம் கட்ட ஆய்வு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று 2ம் கட்ட ஆய்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று குழு 2ம் கட்ட ஆய்வு
X

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 2ம் கட்ட ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று 2ம் கட்ட ஆய்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இது குறித்து ஜி.ஹெச் தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:- நாமக்கல் சுகாதார இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், மண்டல அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட தேசிய தர உறுதி சான்று குழுவினர் பிப். 13ல் முதற்கட்ட ஆய்வு செய்தனர். தற்போது தேசிய தரச்சான்று மண்டல அலுவலர் டாக்டர் அசோக் தலைமையிலான குழுவினர் 2ம் கட்ட ஆய்வு செய்ததுடன், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கினர்.

அரசு மருத்துவமனையில் எத்தனை டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்தம் இருக்கும் படுக்கை வசதி எத்தனை? தங்கி சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு உணவு எங்கு சமைக்கப்படுகிறது? சமையல் செய்பவர்கள் விதிமுறைகளை பின்பற்றி பணிகளை செய்கிறார்களா? எவ்வளவு மருந்து தேவைப்படுகிறது. இதன் கழிவுகள் பிரித்து அனுப்பப்படுகிறதா? இவைகளுக்கெல்லாம் கணக்கு புத்தகம் எழுதி பின்பற்றப்படுகிறதா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர். மூன்றாவது ஆய்வு பிற மாநிலத்தில் இருந்து மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் வழங்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் மேம்பாட்டிற்கு நிதி உதவி வழங்குவார்கள். ஆய்வுக்கு வந்த டாக்டரிடம் அனைவரும் சேர்ந்து, தூய்மை பணியாளர்கள் நியமித்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 2 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...