/* */

காவடி ஊர்வலத்துடன் பங்குனி கிருத்திகை கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் காவடிகள் ஊர்வலத்துடன் பங்குனி கிருத்திகை கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

காவடி ஊர்வலத்துடன் பங்குனி கிருத்திகை கொண்டாட்டம்
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி கிருத்திகையையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில், அறுபடை யாத்திரை குழுவினர் சார்பில், பங்குனி கிருத்திகையொட்டி, யாக பூஜை, 108 சங்காபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தபட்டது. காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்தக்குடங்கள், காவடிகள் எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் சார்பில் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், நடன விநாயகர் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மன் மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, சூரியகிரி மலை முருகன் கோவில் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Updated On: 11 April 2024 3:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா