/* */

நகராட்சி பள்ளியில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா

குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

நகராட்சி பள்ளியில்  கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
X

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமான நிலையில் இருந்தது. இதனை புதிய கட்டிடமாக மாற்றக்கோரி, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அப்பகுதியை சேர்ந்த உமா, ராஜீவ் ராமசாமி மற்றும் ஒசாட் பொதுநல அமைப்பினர் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள் கட்டிடம் கட்டி கொடுத்தனர். அதன் திறப்பு விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். கட்டிடம் கட்டி கொடுத்தவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் பி.டி.ஏ.நிர்வாகி ரவி, நகரில் உள்ள இதர நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Updated On: 3 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  2. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  3. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  6. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  7. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  8. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  10. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...