/* */

குமாரபாளையம் அருகே இரண்டு கன்றுகளை ஈன்ற பசு

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் பசு ஒன்று இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே இரண்டு கன்றுகளை ஈன்ற பசு
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவரின் பசு, இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன், 24. விவசாயி. இவர்கள் ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். நேற்று இவரது பசுமாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதனால் இவரது குடும்பத்தார் மகிழ்ச்சியடைந்தனர். கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து பார்த்து, பசு மற்றும் கன்று குட்டிகள் நலமாக உள்ளதாக கூறியதுடன், சில ஊட்டச்சத்து மருந்துகள் கொடுத்து அதனை கடைபிடிக்குமாறு கூறியுள்ளனர்.

கால்நடை பராமரிப்பு -பசுமாடு வளர்ப்பு முறைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:

பசுமாடுகள் பல இனங்கள் உள்ளன சாஹிவால், கிர், தார்பர்கர், சிவப்பு சிந்து, ஓங்கோல், ஹரியானா, கங்ரெஜ், டியோனி ஆகியவை கறவைக்கு பயன்படும் இனங்கள் ஆகும். அம்ரித்மஹால், ஹல்லிகார், காங்கேயம் ஆகிய இரகங்கள் பண்ணை வேலைக்கு பயன்படுகின்றன. ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ப்ரிசியன் போன்றவை அயல் நாட்டு கறவை இனங்கள் ஆகும்.

வீட்டு மேலாண்மை கொட்டகை அமைப்பு

கொட்டகையின் சுற்றுச்சுவர் நீள, அகல, உயரம் முறையே 5 அளவு இருக்க வேண்டும். தீவனம் பெட்டு ஒரு கால்நடைக்கு 2லிருந்து 2 ½ அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும். தேவையான அளவு குடி தண்ணீர் அளிக்க 10 அளவு அகலமான தண்ணீர்த் தொட்டி அமைக்க வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டி தீவனத் தொட்டிக்கு அருகே அமைக்க வேண்டும். தீவனம் உட்கொள்ளும்போது கால்நடைகள் வடக்கு நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். கோடையில் குளிர்க்காற்று வீசும்போது மாடுகளை குளிரிலிருந்து பாதுகாக்குமாறு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

பசுக்கொட்டகையின் ஒரு பக்கத்தில் சுற்றுச் சுவருடன் கூடிய 10 x 15 அளவுள்ள கொட்டகையை கன்றுகளுக்கு என தனியாக அமைக்க வேண்டும். இடவசதியானது கன்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும். இதையடுத்து சுற்றுச்சுவருடன் கூடிய 20 x 10 திறந்தவெளி இருக்க வேண்டும். இதில் கன்றுகள் சுதந்திரமாக உலவுமாறு அமைக்க வேண்டும்.

பால் தரும் பசுக்களைத் தனிக் கொட்டகை அமைத்து நன்கு பராமரிக்க வேண்டும். பசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஒரே வரிசையிலும் எண்ணிக்கை 10கும் மேற்பட்டதாக இருந்தால் இரண்டு வரிசையாகவும் அமைக்கலாம்.

பொதுவாக ஒரு கொட்டகையில் 80லிருந்து 100க்குள் மட்டுமே பசுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பால் பண்ணைகளில் மாடுகள் இரண்டு வரிசையாகக் கட்டப்படும்போது அவைகளின் முகங்கள் ஒன்றையொன்று பார்த்தவாறோ அல்லது பின் பாகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறோ அமைக்கலாம்.

சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக கன்று பிறத்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது. நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.

இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.

இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

வளரும் கன்றுகளுக்கு தாய்ப்பால் முடிந்தவுடன் தீவனம் சாப்பிட பழக்க வேண்டும். பச்சை தீவனம், வைக்கோல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

மாடுகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும் கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம். அசுத்தமான நீரால் குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்ணுயிரி மூலம் தொண்டை அடைப்பான் நோய்கள் ஏற்படலாம். மாடுகளுக்கு அளிக்கும் நீருடன் கழிவு நீர் கலக்காமல் பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

பிறந்த கன்றுக்கு முதல் மற்றும் முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும். சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும். கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் புல், வைக்கோலும் கலந்து அளிப்பது சிறந்தது.

ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 1.5-2.25 கிலோ வைக்கோல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க வைக்கோல் உண்ணும் அளவும் அதிகமாகும். ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும். பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும். பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் மற்றும் மக்காச் சோளத் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.

சினை பருவத்திற்கு வந்த மாடுகள் கத்திக்கொண்டே இருக்கும். மற்றொரு மாட்டின் மீது தாவும். கண்ணாடி நிறத்தில், கெட்டியாக திரவம் வழியும். பாலின் அளவானது தினமும் கொடுக்கும் பாலைவிட சற்று குறைவாகவே இருக்கும். இதுவே சினை பருவத்திற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி தென்பட்டவுடன் மாடுகளை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்த வேண்டும்.

நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.

மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.

இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.

பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன்ற வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும்.

கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.

உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்க வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ வேண்டும்.

மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும். கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்.

ஏதேனும் நோய் தாக்கினால் தாக்கப்பட்ட மாடுகளை தனித்தனிக் கொட்டகையில் மற்ற மாடுகளிலிருந்து பிரித்து வைக்க வேண்டும். அதற்கென 150 சதுர அடி கொண்ட கொட்டில்கள் அமைத்தல் நல்லது. இக்கொட்டில்கள் மாட்டுக் கொட்டகையிலிருந்து சிறிது தொலைவில் இருக்குமாறு அமைக்க வேண்டும். ஒவ்வொரு கொட்டிலும் சரியான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும்.

கால்நடைப் பண்ணை தினசரி சுத்தம் செய்வது பல நுண்ணுயிரிகள் மூலம் பரவும் தொற்று நோயைத் தடுக்க உதவும். சுகாதாரமான பராமரிப்பிற்கு தினசரி நல்ல தண்ணீர் விட்டு கொட்டகையைக் கழுவுதல், சாணியை சுத்தப்படுத்த முறையான வடிகால் வசதி அமைத்தல் போன்றவை அவசியம். இது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து காக்க உதவும்.

தொழுவத்தில் ஆங்காங்கே நிழல் தரும் மரங்களை வைத்து, எப்பொழுதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

இந்நோய் அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்ற ஓரணு உயிரியால் மாடு மற்றும் எருமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிடிசி எனப்படும் குளோர்டெட்ராசைக்ளின் அனாப்பிளாஸ்மாசிஸைக் கட்டுப்படுத்துகிறது. இதை 0.5 மிகி அளவு உட்கொள்ளச் செய்யலாம். கிருமி நாசினி மற்றும் பிற மருந்துகள் மூலம் உண்ணி, பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோயாகும். நோயுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அடைப்பான் தடுப்பூசி போடவேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசி தேவை இல்லை. இந்நோயினால் இறந்த மாடுகளை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்தவேண்டும்.

இவ்வைரஸ், தட்பவெப்ப நிலையைத் தாங்கி அதிக நாள் உயிருடன் வாழும் தன்மை உடையது. இதனால் இந்நோயைத் தடுக்க, தகுந்த தடுப்பூசி மருந்து இல்லை. தற்போதுள்ள தடுப்பூசி மருந்து முழு நோய் எதிர்ப்புத் திறனை அளிப்பதில்லை. இதன் நோய் எதிர்ப்புத் திறன் நான்கு மாதம் தான். எனவே, நான்கு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடவேண்டும்.

இந்நோய் வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளில் வளரும் மாடுகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. இதுவும் ஓர் மழைக்கால நோயாகும். மழைக்காலத்திற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு ஆண்டும், மாடுகளுக்குத் தடுப்பூசி போடவேண்டும்.

நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் மாட்டைப்பிரித்துத் தனியாக ஒதுக்குப்புறமாக வைத்துக் கண்காணிக்கவேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மாட்டை உறுதியாகக் காப்பாற்றிவிடலாம்.

சிகிச்சை அளிக்காவிட்டால் நோய்க்கண்ட மாடுகள் 5-7 நாட்களில் இறந்துவிடும். இறந்த மாடுகளைச் சுகாதார முறைப்படி அப்புறப்படுத்தவேண்டும். இறந்த இடத்தை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

Updated On: 25 Dec 2022 1:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்