/* */

வேதாரண்யத்தில் இளைஞர்கள் முயற்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

மருதூர் வடக்கு கிராமத்தில் இளைஞர்களாகவே ஒருங்கிணைத்து, புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை துவங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

வேதாரண்யத்தில் இளைஞர்கள் முயற்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
X

 மருதூர் வடக்கு கிராமத்தில் கிராம இளைஞர்கள் முயற்சியில் உருவாகியுள்ள  புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பால்வளத்தை மேம்படுத்த, மாவட்ட ஆட்சியர் கூறிய அறிவுறுத்தலின்படி, பால்உற்பத்திக்கான கட்டமைப்பு வலுப்படுத்தும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதை தாங்கள் ஊருக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எண்ணி, மருதூர் வடக்கு கிராமத்தில் இளைஞர்களாகவே ஒருங்கிணைத்து பால்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை துவங்கியுள்ளனர்.

இதன்மூலம், தமது கிராமத்தின் வருவாய் அதிகரிக்கும் என்றும், மகளிர் மற்றும் குடும்ப பொருளாதார நிலை உயர வாய்ப்புள்ளதாகவும் பால்வளத்துறை துணைப்பதிவாளர் இளங்கோவன் கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியருக்கும் கிராம இளைஞர்கள் சார்பாக அகிலன் தமிழ்ச்செல்வன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Updated On: 14 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை