/* */

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நாகை கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நாகை கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
X
கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த கைலாசநாதர் ஆலயம். இந்த கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 33 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. நிர்வாகி தலைமையிலான கும்பல் அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

கைலாச நாதர் கோவிலின் அறங்காவலர் ராஜா என்பவர் அவருடைய காலத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியின் தம்பி மகன் அதே பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் கோவில் நிர்வாகத்தை நடத்த உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்துள்ளார். அதனை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பொன்னம்பலம் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை நடத்தி வந்த பொன்னம்பலத்திடம் அனுமதி பெற்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான முருகையன் என்பவர் கோவில் நிலத்தில் சாகுபடி செய்து முறைப்பட குத்தகை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மழை காரணமாக இந்த ஆண்டு தாமதமாக விவசாய பணிகளை தொடங்கியபோது திருமருகல் அ.தி.மு.க. துணை ஒன்றிய சேர்மன் திருமேனி தலைமையிலான கும்பல் வயதானவர் என்பதால் விவசாய பணிகளை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலத்தை தங்களது பெயருக்கு மாற்றி தரும்படியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மக்கள், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர்.

அப்போது கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும், அ.தி.மு.க. திருமருகல் ஒன்றிய துணை சேர்மன் திருமேனி, அரவிந்தன், நடராஜன், சீனிவாசன், விஜயக்குமார், முருகன், இறையன்பு உள்ளிட்ட 7 பேர் மீது நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும், கோவில் நிலத்தை மீட்டுகொடுக்கவும் கொலை மிரட்டல் விடுத்துவரும் நில அபகரிப்பு கும்பலை விரைந்து கைது செய்யவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Updated On: 6 Dec 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!