/* */

அலங்காநல்லூர் அருகே 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் நெல் மூட்டைகள், குவித்து வைக்கப்பட்ட குவியல்கள் நனைந்து வருகிறது

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே  15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே செல்லக் கவுண்டன் பட்டியில், அரசு கொள்முதல் நிலையத்தில், தேங்கிக் கிடக்கும்15.000-க்கும்மேற்பட்ட நெல் மூட்டைகள்

நெல்கொள்முதல் செய்யாததால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதியில், முல்லை பெரியாறு பாசனம் மூலம் விளைவித்து நெல் அறுவடை நடைபெற்ற பல்வேறு இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் அருகே செல்லக் கவுண்டன்பட்டியில், கடந்த இரண்டு மாத காலமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகள் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளனர்.

கடந்த 2 மாதத்திற்கு மேலாக கொள்முதல் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் வராததால், தேங்கிய நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் நெல் மூட்டைகள், குவித்து வைக்கப்பட்ட குவியல்கள் நனைந்து வருகிறது.



இதுகுறித்து முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரியான சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் கூறியதாவது: பொறியியல் பட்டதாரியான, நான் விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் மண்பரிசோதனை உட்பட அனைத்து சோதனை களும் செய்து விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்தோம். ஆனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இங்கு விவசாயிகள் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்து காத்துள்ளனர்.

அதிகாரிகள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லாமல், அதிகப்படியான நெல் மூட்டைகள் நனைந்து வருகின்றனர். இது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும் என்னைப் போன்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகிறது. தமிழக அரசு உடனே தலையிட்டு, செல்லக் கவுண்டன்பட்டியில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல் மற்றும் நெல் மூட்டைகளை, உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என்றார்.

Updated On: 26 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்