/* */

மதுரை அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா
X

மதுரை மாவட்டம் மேலூர் அருகே குன்னாரம்பட்டியில் பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள ராஜனேரி கண்மாய் 10 வருடங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் கடந்தாண்டு நிரம்பியது. தற்போது கோடை காலம் துவங்கி தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

அதிகாலையில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசியதை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவர். இதுபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Updated On: 13 April 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை