/* */

சோழவந்தான் அருகே கோயில் விழாவில் கலைநிகழ்ச்சி

மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே கோயில் விழாவில் கலைநிகழ்ச்சி
X

சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவிலிவ் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா

சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மகா சிவராத்திரி விழா பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. எட்டூர் கிராம பொதுமக்கள் மற்றும் சென்னாக்கல் நண்பர்கள் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் அண்ணதானம் வழங்கப்பட்டது. இரண்டாவது நிகழ்ச்சியாக நடன நாட்டிய கலை நிகழ்ச்சி மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது.

உசிலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, செல்லம்பட்டி யூனியன் சேர்மன் கவிதா ராஜா, திமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பாக, இளையரசு,ஆர். கே. சாமி, ஊராட்சி தலைவர் கலியுக நாதன், துணைத் தலைவர் செல்வி செல்வம் ,எட்டூர் கமிட்டி நிர்வாகிகள், விக்கிரமங்கலம் எட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகா சிவராத்திரி மகிமைகள்...

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

Updated On: 21 Feb 2023 1:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!