/* */

திமுக கூட்டணி நிச்சயம் உடையும்-எல்.முருகன்

திமுக கூட்டணி நிச்சயம் உடையும்-எல்.முருகன்
X

தமிழகத்தில் திமுக கூட்டணி நிச்சயம் உடையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராசர் சாலை பகுதியில் பாஜக சார்பில் தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,நாராயணசாமியின் இயலாமையால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது, காங்கிரஸ் கட்சி தற்போது இந்தியாவில் இல்லை , ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளது. தமிழகத்திற்கு ராகுல்காந்தி வந்து சென்றதால் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்து போகும், ஸ்டாலின் திமுகவை நடத்துவது அக்கட்சி நிர்வாகிகளுக்கே பிடிக்கவில்லை.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது உலகநாடுகள் பிரச்சனை. அதை குறைக்க வழிவகை செய்வோம்.பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது கடந்த ஆட்சியில் இருந்தது போல நிலை தான் உள்ளது. ராகுல் செல்லும் இடங்களில் எல்லாம் இனி காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி தான்.வரும் 25ம் தேதி கோவையில் பிரதமர் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. வேளாண் சட்டத்தை முன்மொழிந்ததே காங்கிரஸ் கட்சி தான். எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தவுள்ளதை முன்னரே தெரிந்து ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடுகிறார். தமிழகத்தில் திமுக கூட்டணி நிச்சயம் உடையும் அதற்கான சாத்தியகூறு உள்ளது என்றார்.

Updated On: 24 Feb 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்