/* */

தமிழகத்தில் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தொடர்பாக தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாமென சுகாதாரத் துறை செயலர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

தமிழகத்தில் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை:  சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்
X

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை கிண்டியில் உள்ள அரசு கொரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவிவருகிறது. ஆனால், தமிழகத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார்.தமிழகத்தில் சராசரியாக 1,000 பேருக்கு பரிசோதனை செய்தால், 3 பேருக்கு தொற்று உறுதியாகிறது. எனவே, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான அவசியம் தற்போது இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. வீண் வதந்திகளை நம்பவேண்டாம். தமிழகத்தில் கவலைப்பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

ஐஐடியில் மேலும் 32 பேருக்கு தொற்று: சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் ஏற்கெனவே 79 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தொற்று பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளனர். 7,490 பேரில் 3,080 பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடியில் மேலும் 2 நாட்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கும். மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை. பொது இடங்களுக்குச் செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்


Updated On: 27 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!