/* */

மதுரையிலிருந்து ராமாயண காவிய சுற்றுலா சிறப்பு ரயில்

மதுரையிலிருந்து ராமாயண காவிய சுற்றுலா சிறப்பு ரயில்: தென்னக இரயில்வே அறிவிப்பு

HIGHLIGHTS

மதுரையிலிருந்து ராமாயண காவிய சுற்றுலா சிறப்பு ரயில்
X

மதுரையிலிருந்து ராமாயண காவிய சுற்றுலா சிறப்பு ரயில்: தென்னக இரயில்வே அறிவிப்பு

ராமாயண காவியம் நடைபெற்ற நகரங்களை இணைத்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ராமாயண காவிய சுற்றுலா சிறப்பு ரயிலை நவம்பர் மாதம் இயக்குகிறது.

இந்த சிறப்பு ரயில் மதுரையிலிருந்து வருகிற நவம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்பட இருக்கிறது.

இந்த ரயில் மூலம் ராமாயண காவியம் தொடர்புடைய நகரங்களான ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதா மார்ஹி, நேபாளம் ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் ராம ஜென்ம பூமி நந்திகிராம், சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 14 நாட்கள் சுற்றுலாவில் உணவு, தங்குமிடம், ரயில் கட்டணம், உள்ளூர் சாலை போக்குவரத்து செலவு உட்பட நபர் ஒருவருக்கு கட்டணம் ரூபாய் 14490/- வசூலிக்கப்படும்.

மத்திய மாநில அரசுகளின் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடத்தப்படும். இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள விரும்பும் பயணிகள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். மத்திய மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி (விடுமுறை சுற்றுலா சலுகை) வசதி மூலமும் இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம்.

இந்த ரயிலுக்கு பயணச்சீட்டு பதிவு செய்ய அலைபேசி எண் 8287931977 ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

Updated On: 30 Sep 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!