/* */

செயற்கை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்

இந்த ஆண்டு கோவில் வளாகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவார்.

HIGHLIGHTS

செயற்கை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்
X

சித்ரா பௌர்ணமி நாளில் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வு என்பது மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக நடைபெறும்.

இந்த விழாவானாது நேற்றைய முன்தினம் தொடங்கிய நிலையில் வரும் 27ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வை கோவில் வளாகத்தில் உள்திருவிழாவாக நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்த ஆண்டு கோவில் வளாகத்தில் செயற்கையான வைகை ஆற்றை உருவாக்கி, அதில் வைகையாற்று நீரை நிரப்பி அதில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுவதை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வான தேனூர் மண்டபம் போன்ற செயற்கை அமைப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோவில் வளாகத்திலயே நடைபெறும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வு அழகர்கோவில் இணையபக்கத்திலும் தொலைக்காட்சிகளிலும் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 26 April 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!