/* */

கரூரில் அதிகரிக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளின் உபயோகம் கட்டுப்படுத்தப்படுமா

கரூரில் விதிகளைமீறி கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அரசியல் கட்சிகள் உபயோகிப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

HIGHLIGHTS

கரூரில் அதிகரிக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளின் உபயோகம் கட்டுப்படுத்தப்படுமா
X

கரூரில் விதிகளை மீறி அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி

கரூரில் விதிகளை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சி உபயோகித்து வருவது ஒலி மாசு ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் 69வது பிறந்த தினம், நேற்று திமுக சார்பில் தமிழக அளவில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவினை தொடர்ந்து மாலை முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம் எழுச்சியுரை என்று கரூர் மாவட்ட திமுக சார்பில் 80 அடி சாலையில் நடத்தப்படவுள்ளது.

கொரோனா காலகட்டம் என்பதால் எங்கேயும் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என்று அந்த விதிகள் நாளை முதல் நீக்கப்படுவதையடுத்து புதன்கிழமை கரூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்காக செங்குந்தபுரம் மற்றும் காமராஜபுரம் மேற்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழக அரசின் மின்சார வாரிய துறைக்கு சொந்தமான மின்கம்பங்களில், கூம்பு வடிவ ஒலி பெருக்கி கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்கு வெளியேறும் அதிகப்படியான ஒலியின் அளவு , டெக்ஸ்டைல், தனியார் பள்ளி, வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

அரசாணையை மீறுவது சட்டப்படி குற்றம், அதிலும் கொரோனா விதிகள் நாளை முதல் தளர்த்தப்பட்டு பொதுக்கூட்டம் நாளை முதல் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு உள்ள நிலையில் முன்கூட்டியே திமுக சார்பில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளும் எழுச்சியுரை பொதுக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 March 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!