/* */

கரூரில் பிப்ரவரி மாதம் திமுக, அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு

கரூர் மாவட்ட திமுக சார்பில் சமூக வலைதளங்களில் எந்த இடம் என்று அறிவிக்காமல் கரூரில் ஜல்லிக்கட்டு என்று விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கரூரில் பிப்ரவரி மாதம் திமுக, அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு
X

பைல் படம்.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கரூரில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில் சமூக வலைதளங்களில் எந்த இடம் என்று அறிவிக்காமல் கரூரில் ஜல்லிக்கட்டு என்று விளம்பரப்படுத்தி வருகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கரூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான திருவள்ளுவர் மைதானம், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளில், இந்தப் போட்டியை நடத்த முடியாது. ஏனென்றால் மாடுகள் அசுர வேகத்தில் செல்லும், மாடுபிடி வீரர்களின் தூரமும் இதில் சரிவராது. இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டி பகுதியிலா ? அல்லது கரூர் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு பகுதிகளிலா ? என்று இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அதிமுகவினரும், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என கூறி, வரும் பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு பேரவை குழு சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இவர்களும் இதுவும் எந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உள்ளனர் எனறு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...