/* */

அதிமுகவினர் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்

உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

அதிமுகவினர் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் மீது திமுக தூண்டுதலால் பொய் வழக்கு போடப்படுகிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் நேற்று இரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக, அதிமுகவினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆளுங்கட்சி தூண்டுதலால் அதிமுகவினர் 4 பேர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர். பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்து 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிமுகவினரை, திமுகவில் இணையும்படி மிரட்டி வருகின்றனர். தோல்வி பயத்தில் திமுக உள்ளது. அரசு கட்டிடங்களில் திமுகவினர் விளம்பரம் எழுதி அராஜகம் செய்து வருகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் போலி கொலுசு கொடுத்து ஏமாற்றியது போல தற்போது உள்ளாட்சி தேர்தலில் கொலுசு கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனர் என குற்றச்சாட்டினார்.

Updated On: 4 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்