/* */

ரயில் தண்டாவாளத்தில் தலை துண்டித்த நிலையில் கிடந்த முதியவரின் உடல்

கரூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

HIGHLIGHTS

ரயில் தண்டாவாளத்தில் தலை துண்டித்த  நிலையில் கிடந்த முதியவரின் உடல்
X

பைல் படம்.

கரூர் வெங்கமேடு மேம்பாலம் அருகில் ரயில்வே தண்டாவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முதியவர் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் மேல் சட்டை பாக்கெட்டை பரிசோதித்த போது, ஓட்டுநர் அடையாள அட்டை கிடைத்தது.

அதில் அவருடைய பெயர் ரவி (வயது 54) என்றும், அவரது தந்தை பெயர் பெத்தன் என்றும், பெரியபட்டி, நாமக்கல் மாவட்டம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவில் ரயில் தண்டாவாளத்தில் தலை வைத்திருந்து படுத்திருந்ததால் ரயில் ஏறி தலை துண்டாகி இருக்கலாம் என்றும் நள்ளிரவு சென்ற ரயிலில் அடிபட்டு இறந்ததால் உடல் விரைத்துப் போன நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 17 Feb 2022 12:06 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...